Sunday, January 06, 2008

410. திருட்டுக் கேப்டன் பாண்டிங்குக்கு "5 டெஸ்ட்" தடை விதிக்கலாமா?

சிட்னியில் நடந்த 2வது டெஸ்ட்டில், தோனியின் காலுறையில் பட்டு எழும்பிய பந்தை காட்ச் பிடித்து, ரிக்கி பாண்டிங் அதி அமர்க்களமாக அம்பயரிடம் அப்பீல் செய்தார். பந்து மட்டையில் படவில்லை என்பது வேறு விஷயம், அந்த களவாணி கேப்டன் காட்ச் பிடித்த அழகை படத்தில் பாருங்கள் !!! பந்து தரையில் பட்டுக் கொண்டிருக்கிறது :)

2003-இல், இதே போல, தரையில் பட்டு பிடித்த காட்ச்சுக்கு அப்பீல் செய்த பாகிஸ்தானி கேப்டன் ரஷித் லத்தீபுக்கு, அடுத்த 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதித்து, தண்டனை வழங்கப்பட்டதை இங்கே நினைவு கூர்வது அவசியமாகிறது !!!

இந்திய நிருபர் ராஜாராமன், டெஸ்ட் முடிந்து நடந்த பேட்டியில் பாண்டிங்கை, அந்த காட்ச் சரியாக பிடிக்கப்பட்டதா என்று கேட்ட கேள்விக்கு, திருவாளர் களவாணிக் கேப்டன் பயங்கர கடுப்பாகி, "பந்து நிச்சயம் தரையில் படவில்லை, என்னுடைய நேர்மையை சந்தேகித்தால், நீங்கள் இங்கு என்னை கேள்வி கேட்பதில் அர்த்தமில்லை" என்று சொன்னதை டிவியில் பார்த்தபோது, பாண்டிங்குக்கு "மரை கழண்டு" விட்டதோ என்ற சந்தேகம் வந்ததென்னவோ நிஜம் :)

இன்று, பிரபலமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் விமர்சகரான பீட்டர் ரேபாக், பாண்டிங் உடனடியாக கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டுமென்றும், பாண்டிங் ஆஸ்திரேலிய அணியை வெறி நாய்க் கூட்டமாக மாற்றி விட்டார் என்றும் பத்திரிகை ஒன்றில் சாடியுள்ளார் !!!

Please read:
2 குருட்டு, ஆஸ்திரேலிய அடிவருடி அம்பயர்களும், 1 களவாணி கேப்டனும்

எ.அ.பாலா

19 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

For your kind information, the name of the match refree who gave the ruling in Rashid Latif's case is MIKE PROCTER ;-)

MeenaArun said...

this is a forwars mail i got .like to share wiTh uNEW RULES IN ICC !!!!!!!!!!!!!(1) Ricky Ponting – (THE TRULY GENUINE CRICKETER OF THE CRICKET ERA AND WHOSE INTEGRITY SHOULD NOT BE DOUBTED) should be considered as the FOURTH UMPIRE. As per the new rules, FOURTH UMPIRE decision is final and will over ride any decisions taken by any other umpires. ON-FIELD umpires can seek the assistance of RICKY PONTING even if he is not on the field. This rule is to be made, so that every team should understand the importance of the FOURTH UMPIRE.(2) While AUSTRALIAN TEAM is bowling, If the ball flies anywhere close to the AUSTRALIAN FIELDER(WITHIN 5 metre distance), the batsman is to be considered OUT irrelevant of whether the catch was taken cleanly or grassed. Any decision for further clarification should be seeked from the FOURTH UMPIRE. This is made to ensure that the cricket is played with SPORTIVE SPIRIT by all the teams.(3) While BATTING, AUSTRALIAN players will wait for the ON-FIELD UMPIRE decisions only (even if the catch goes to the FIFTH SLIP as the ball might not have touched the bat). Each AUSTRALIAN batsman has to be out FOUR TIMES (minimum) before he can return to the pavilion. In case of THE CRICKETER WITH INTEGRITY, this can be higher.(4) UMPIRES should consider a huge bonus if an AUSTRALIAN player scores a century. Any wrong decisions can be ignored as they will be paid huge bonus and will receive the backing of the AUSTRALIAN team and board.(5) All AUSTRALIAN players are eligible to keep commenting about all players on the field and the OPPONENT TEAM should never comment as they will be spoiling the spirit of the AUSTRALIAN team. Any comments made in any other language are to be considered as RACIALISM only.(6) MATCH REFREE decisions will be taken purely on the AUSTRALIAN TEAM advices only. Player views from the other teams decisions will not be considered for hearing. MATCH REFREES are to be given huge bonus if this rule is implemented.(7) NO VISITING TEAM should plan to win in AUSTRALIA. This is to ensure that the sportive spirit of CRICKET is maintained.(8) THE MOST IMPORTANT RULE: If any bowler gets RICKY PONTING - “THE UNDISPUTED CRICKETER WITH INTEGTIRY IN THE GAME OF CRICKET” more than twice in a series, he will be banned for the REST OF THE SERIES. This is to ensure that the best batsman/Captain will be played to break records and create history in the game of CRICKET.These rules will clarify better to the all the teams VISITING AUSTRALIA .

Sridhar V said...

ஆம்! பிரேமின் பதிவை படித்தேன். இங்கே நீங்கள் அதை பதிந்ததற்கு மிக்க நன்றி!

பாண்டிங் தன் நம்பகத்தன்மையை இழந்து விட்டதற்க்கு சான்று இந்த புகைப்படம். கேவலம் :-(

Anandha Loganathan said...

பாலா,

இந்த பதிவை எடுத்து என் நண்பர்களுக்கு அணுப்புகின்றேன் உங்கல் அனுமதியுடன்.

Anandha Loganathan said...

Ponting can change his name as
(T)Ricky Ponting.

தங்ஸ் said...

மூணு பேரையும் வரிசையா நிக்க வச்சு .....யடிக்கணும். BCCI இல்லன்னா ICC கிடையாது..ஆனா,நாம அவனுங்க பின்னாடி தொங்க வேண்டியிருக்கு..

Unknown said...

I share your opinion bala.Australia has earned shame to their reputation.

There is a petition to BCCI towards this.Please have a look at it

http://www.petitiononline.com/bcci/

said...

Hey MIKE PROCTER is gave 3 test ban for harbajan now i think something something rick ponting and MIKE PROCTER

said...

Bala,
I was reading all your recent posts.. romba tension ah irukinga pola. athulayum latest ah pointing pathi ezuthi irukinga pathingala athu romba over. Close ah field pannitu irukum pothu you cannot notice that where the ball got hit nu.. more over its common to appeal for the ball in the air. over ah appeal panni namma alunga vangi katikita matters neraya iruku.. so we cant blame pointing on this.

thallai how can you defend a team that can lose 5 wickets in a span of just 1.5 overs. Bad umpiring is not new, it has happened and it will happen(human error and the pressure in the field cause these), lets leave the 2 wickets what about the other 8 including genius batsman, cant they stay in the field for just 72 overs come on thallai.. these guys have jst created lots of noise in this issue since they wanted to divert the fact that they lost so badly.. if at all rest of the series is going to happen parunga aussies are going to crush the rest of the matches.. these hopeless guys are not worth for it.

read my views on santhosh pakkangkaL

With :))s
Santhosh

சீனு said...

//பாண்டிங் உடனடியாக கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டுமென்றும்,//

ம்ஹூம்..."Ponting should be sacked" இதைத்தான் சொல்லியிருக்கார் பீட்டர் ரேபாக்.

//so we cant blame pointing on this. //

பந்து தரையில படுறது பான்டிங்க்கு தெரியாதா? கை பரத்து போய்விட்டதா என்ன? அப்படியே தெரியாம அப்ளை பன்னுனாலும் பேட்ஸ்மேன் முதற்கொண்டு சுற்றி இருந்தவர்களுக்கு தெரியாதா? டி.வி. ரிப்ளேயில் தெரியாதா?

//these guys have jst created lots of noise in this issue since they wanted to divert the fact that they lost so badly..//

:) வாழ்க உங்கள் சொரனை...

நேற்று இலங்கை, பாகிஸ்தான். இன்று நாம். நாளை இன்னொரு அணி. பூனைக்கு யார் தான் மணி கட்டுவது?

தங்ஸ் said...

Santhosh,
என்னங்க இப்படி சொல்றீங்க? 8:1 ratio of bad decisions against india is very common?

நண்பன் said...

பாலா,

'Do not trust Australians when they are playing cricket என்ற புதுமொழியை இன்று NDTVயில் கேட்க நேர்ந்தது.

இப்பொழுது புதிதாக ஒரு புகார் BCCI எழுப்ப வேண்டும் என்று பரவலாக கோரப்பட்டுள்ளது. அதாவது நடுவர் விளக்கம் கேட்ட பொழுது, பொய் சொல்லி ஏமாற்றினார் என்று பாண்டிங் மீது புகார் கொடுத்து தண்டனை கொடுக்கக் கோர வேண்டுமென்று.

நியாயம் தானே?

பாண்டிங் நேர்மையாக நடக்கவில்லையென தண்டனை கொடுக்கப்பட வேண்டும் - கண்டிப்பாக.

ஓகை said...

//Close ah field pannitu irukum pothu you cannot notice that where the ball got hit nu.. more over its common to appeal for the ball in the air. over ah appeal panni namma alunga vangi katikita matters neraya iruku.. so we cant blame pointing on this.//

தோ வந்துகிறார் பாருங்கப்பா நம்ம சந்தோசு வெள்ளக்கார தொர கணக்கா. பொண்டிங்குக்கு சப்போர்ட்டா! காச்சி புட்சப்ப தெர்லன்னாலும் அப்பால டிவியிலியும் போட்டாலயும் பாத்தப்பறம் வாய பொத்திக்க வோணாம் இந்த பொண்டிங்கு? கிழியுதே வாயி ஆர்டிக்லேர்ந்து அண்டார்டிக்கா வரிக்கும்.

நம்ம கும்ளேக்கும் புள்ளைங்களுக்கம் ஆடத் தெர்லியாம் ஆனா பொண்டிங்கு ரொம்ப ஒஸ்த்தியாம், சொல்றாருய்யா சந்தோசு! சொம்மா சொல்லகுடாதுய்யா அந்த பக்னரு தோத்துடுவாரு சந்தோசுகிட்ட.

நண்பன் said...

Meena Arun,

Nice mail.

Thanks.

சீனு said...

Ponting: (n) (adj)
1. A substance or entity or even a person of unquestionable integrity
2. An act of uncivilised behaviour. [Also, pontingness (n)]

Usage: The judge was driven towards justice because he knew that the pontiff was a ponting.
Sir Bonkers said, "Don't try to bully me. I surely can fathom the pontingness in your eyes".

Bucknor: (n) (adj)
1. Temporary blindness leading to missing out on the obvious.
2. To be at the wrong place at the wrong time.
3. Situations leading to grave judgemental errors.
Usage: I feel bucknored by my boss; Life often throws a bucknor at you.

Benson: (n) (adj)
1. Something that legitimises a severe bucknor.
Usage: First they bucknored me and then they bensoned it! I am toast.
Also see bucknor

enRenRum-anbudan.BALA said...

மீனா அருண்,
இந்த புது ICC rules சம்ம கலக்கல் :)

ஸ்ரீதர் நாராயணன்,
பாண்டிங்குக்கு கர்வம் தலைக்கேறி விட்டதே, நடந்தவைக்கு ஒரு முக்கியக் காரணம் என்று எண்ணுகிறேன் :( தலைவன் எவ்வழி, அணியினர் அவ்வழி, அல்லவா ????

ஆனந்த லோகநாதன்,
நன்றி. தாராளமாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் !

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

தங்ஸ்,
//BCCI இல்லன்னா ICC கிடையாது..ஆனா,நாம அவனுங்க பின்னாடி தொங்க வேண்டியிருக்கு..
//
அத நினைச்சா தான் சம்ம கடுப்பா இருக்கு :(

செல்வன்,
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

அகில்,
இருக்கலாம் ;-)

சந்தோஷ்,
உங்கள் கருத்து, உங்களுக்கு, என் கருத்து எனக்கு :)
இந்த தோல்விக்கு அம்பயர்கள் செய்த அக்கிரமமே நிஜமான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது :( நீங்கள் பாண்டிங்குக்கு ஆதரவு தருவது வியப்பாக இருக்கிறது !!!

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

சீனு,
ஆமாம், பீட்டர் ரேபாக், "Ponting should be sacked" என்று தான் கூறியிருக்கார், நான் தப்பா சொல்லிட்டேன் :( மத்தபடி, சீனு vs சந்தோஷ் மேட்டரிலிருந்து நான் அப்பீட் ஆயிக்கிறேன் :)))
******************************
நண்பன்,
//
'Do not trust Australians when they are playing cricket //
இது புதுமொழி இல்ல, ரொம்ப "பழைய மொழி" ஆச்சே ;-)

BCCI நிச்சயம் பாண்டிங் மீது ICCயிடம் புகார் கூற வேண்டும், அவர் நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டதற்காக !!!!
*********************
ஓகை,
வாங்க, மெட்ராஸ் பாஷை சும்மா சரளமாக வருது :)
**********************
சீனு,
உங்கள் "புதுப்புது அர்த்தங்களை" ரசித்தேன் :))))))))))))))

எ.அ.பால

said...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails